கனடாவில் மீன்பிடிப்படகு விபத்துக்குள்ளானதில் மூவர் கொல்லப்பட்டனர்

#Canada #Accident #Fish #Lanka4 #விபத்து #லங்கா4 #Boat #மீன் #Canada Tamil News #Tamil News
கனடாவில் மீன்பிடிப்படகு விபத்துக்குள்ளானதில் மூவர் கொல்லப்பட்டனர்

கனடாவில் மீன்பிடி படகு ஒன்று விபத்து கொள்ளானதில் மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 கியூபெக் கடல் பகுதியில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகு விபத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கியூபிக் மாகாணத்தின் நோட்ஷோ பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆறு மீனவர்கள் மொன்றியலுக்கு 1300 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற கரையோர பாதுகாப்பு படையினர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படகு விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

 உயிரிழந்த மீனவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!