தெல்தெனிய வைத்தியசாலையின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

#SriLanka #Death #Hospital
Prathees
2 years ago
தெல்தெனிய வைத்தியசாலையின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

 இந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் வார்ட் 06ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

 பன்வில கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4