இலங்கை அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தும் IMF!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தும்  IMF!

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (26.09) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மீளாய்வு வேலைத்திட்டத்தின் இறுதி கலந்துரையாடல் சுற்று நேற்று இடம்பெற்றது. 

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இவ்வருட வருமானப் பற்றாக்குறை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு முடிவுகளை இன்று (27.09)  விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4