ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம்!

#India #GunShoot #sports #2023 #Tamilnews #Gold #Player #Breakingnews #ImportantNews #AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம்!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5வது நாளில், இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 6வது இடத்தில் உள்ளது.

50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீன அணி 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4