இரத்தினபுரியில் பாடசாலை ஒன்றில் மதுபானம் விற்பனை செய்த மாணவன்
#SriLanka
#School
#Student
#liquor
#Rathnapura
Prasu
2 years ago
இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானா பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனொருவன் சக மாணவர்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், இதனை அவதானித்த பாடசாலை ஆசிரியர் மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.
குறித்த மாணவன் தண்ணீர் போத்தலில் கசிப்பை கொண்டு சென்று உயர்தர மாணவர்களக்கு கோப்பைகளில் ஊற்றி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸார் மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே