பிரான்ஸில் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மருத்துவ ஆலோசனைகள் இலவசம்

#France #Medical #Lanka4 #சேவை #வைத்தியர் #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸில் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மருத்துவ ஆலோசனைகள் இலவசம்

மருத்துவ ஆலோசனைகளை படிப்படியாக வயதெல்லை நிர்ணயித்து இலவசமாக, பிரான்சில் வாழும் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனும் யோசனையை முன்னாள் சுகாதார அமைச்சர் François Braun அவர்கள் செப்டம்பர் 2022 முன்வைத்தார்.

 வாழ்க்கையின் மூன்று முக்கிய வயதில் அவை படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும்: 18 முதல் 25 வயது வரை, 45 முதல் 50 வயது வரை மற்றும் 60 முதல் 65 வயது வரை. என அவர் வயதெல்லையை வரையறை செய்தார். 

 காரணம் 18 முதல்.25 வரை உடல் செயல்பாட்டில் பெரும் மாற்றங்கள் நிகழும், தொழில் வாழ்க்கை தொடங்கும், பல விடயங்களுக்கு அடிமையாகுதல் ஆரம்பிக்கும், சிந்தனைகள் அதிகமாகும். எனவே அந்த வயதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ ஆலோசனைகள் தேவை.

 அடுத்து 45 முதல் 50 வரை குறித்த வயதிலிருந்து, உடல் செயல்பாடுகள் மற்றும் மனநலக் கோளாறுகள், இருதய நோய்கள், மார்பகம், பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணிகள் தோன்றும்.

 எனவே இப்போது மருத்துவ ஆலோசனைகள் தேவை. அடுத்து 60 முதல் 65 வரை. நிரந்தர நோய்கள், மனஉளைச்சல்கள், மறதி, என உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் இப்போதும் மருத்துவ ஆலோசனைகள் தேவையாகிறது.

 அவரின் அன்றைய யோசனையை இன்று அரசு அமுல் படுத்த முன்வந்துள்ளது. முதல் கட்டமாக பிரான்சின் Hauts-de-France பகுதியில் 45 வயது முதல் 50 வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

 பின்னர் படிப்படியாக நாடுமுழுவதும் குறித்த இலவச ஆலோசனை சாத்தியமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.