தீவிரமடையும் உக்ரைன் -ரஷ்ய போர் : ஒரேநாளில் 320 வீரர்களை இழந்த ரஷ்யா!

#War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
தீவிரமடையும் உக்ரைன் -ரஷ்ய போர் : ஒரேநாளில் 320 வீரர்களை இழந்த ரஷ்யா!

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் நேற்று (27.09) மட்டும் ரஷ்யா 320 வீரர்களை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் ரஷ்யா போரானது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 581வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல், பீரங்கி தாக்குதல் என இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். இந்த போர் தாக்குதலில் எதிரி படைகளின் தினசரி இழப்பு குறித்து உக்ரைன் ஆயுதப்படை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

அதனடிப்படையில் நேற்று மட்டும்  ரஷ்யா 320 வீரர்களை இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அத்துடன் 3 டாங்கிகள், 4 கவச வாகனங்கள், 24 ட்ரோன்கள் ஆகியவற்றையும் ரஷ்யா உக்ரைனிடம் இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

  போர் தொடங்கியதில் இருந்து இது நாள் வரை ரஷ்யா கிட்டத்தட்ட 2,76,990 ராணுவ வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!