கனடா - இந்திய முறுகல் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பதில்
#India
#Canada
#Minister
#Lanka4
#லங்கா4
#Foriegn
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
இந்தியாவின் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஐ.நா. பொதுசபையின் 72-வது கூட்டத்தொடரில் பங்கேற்று கடந்த (26.09.2023) உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றம் சாட்டியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடாவிடம் நாங்கள் 2 விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஒன்று, அவர்கள் குற்றம் சாட்டிய வகையிலான செயல்களில் ஈடுபடுவது இந்திய அரசின் கொள்கையே அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.