ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

#India #sports #2023 #Player #Breakingnews #ImportantNews #Sports News #AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக செயல்பட்டது.

இதில், அர்ஜுன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் சிவா நார்வால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியின் ஆரம்ப சுற்றில் அர்ஜுன் 97 புள்ளிகளையும், சிவா 92 புள்ளிகளையும், சரப்ஜோத் சிங் 95 புள்ளிகளையும் பெற்றனர்.

தொடர்ந்து, அடுத்தடுத்த தொடரில், இந்திய அணி மொத்தம் 1,734 புள்ளிகளை வென்றுள்ளது. தங்க பதக்கமும் தட்டி சென்றுள்ளது. போட்டியில், சீனா வெள்ளி பதக்கமும், வியட்னாம் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது.

இப்போட்டியில் சரப்ஜோத் சிங் 580 புள்ளிகள், அர்ஜுன் 578 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 5-வது மற்றும் 8-வது இடம் பிடித்து தனிநபர் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4