பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது!

#SriLanka #Sri Lanka President #Parliament #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது!

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. 

அது தொடர்பில் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் பிரசுரமாகி இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் எதிர்வரும் 3ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

 அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டபோது, அதில் உள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் சென்றனர். 

 அதன் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரண் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வியாக்கியானம் செய்திருந்தது. 

 இதன் பின்னணியிலேயே அனைத்து தரப்பினரதும் ஆலாேசனைகளை பெற்று குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். 

என்றாலும் தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 அதேநேரம் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊடாக சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!