'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

#Cinema #Actor #TamilCinema #Director #release #2023 #Movies #Movie
Mani
2 years ago
'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து, 'சலார்' திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும் என்று படக்குழு தெரிவித்தது. ஆனால், சில காரணங்களால் இந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, போஸ்டரையும் வெளியிட்டு, 'சலார்' படத்தை டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4