பிரான்ஸில் பணவீக்கத்தின் பெறுமதியில் மாற்றமின்மையால் உணவுப்பொருட்களின் விலையில் வீழ்ச்சியில்லை
இந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தகவலின் படி, பிரான்சில் பணவீக்கத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்தும் உச்சத்திலேயே இருப்பதாக ஆய்வு நிறுவனமான INSEE தெரிவித்துள்ளது.
இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பமான போது அதிகரித்த பணவீக்கம், படிப்படியாக குறைவடைந்து வருகிறது. சென்ற வருடத்தில் 6.4% வீதமான இருந்த பணவீக்கம், கடந்த ஓகஸ்ட் மாதம் 4.9% வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது.
ஆனால் அடுத்த ஒரு மாதத்தில்/ இந்த செப்டம்பரில் பணவீக்கத்தில் மாற்றம் இல்லை எனவும், தொடர்ந்தும் அதே 4.9% சதவீதமாகவே உள்ளது எனவும் INSEE தெரிவித்துள்ளது.
அதேவேளை, உணவுப் பொருட்களின் விலை சொல்லிக்கொள்ளும்படியான வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை எனவும், ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் 11% சதவீதமாக அதிகரிப்பில் இருந்த விலை தற்போது 9.6% சதவீதமாக குறைவடைந்துள்ளது. என்றபோதும், பணவீக்கம் காரணமாக பிரான்சில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.