இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதிக்காக சங்கருக்கு லைக்கா வைத்த செக்.

#Cinema #Actor #TamilCinema #Lanka4 #Kamal
Kanimoli
2 years ago
இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதிக்காக சங்கருக்கு லைக்கா வைத்த  செக்.

இப்ப வருது அப்ப வருது என பல வருடங்களாக இந்தியன் 2 படம் பூச்சாண்டி காட்டி வருகிறது. ஆனால் இன்னும் வந்த பாடாக இல்லை. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சங்கர் இயக்கி லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் சேர்ந்து தயாரித்த படம் தான் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்தும் ரிலீஸ் தேதியே அறிவிக்காமல் இருக்கிறார்கள். ஏற்கனவே படம் எடுக்கும்போது ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்து தான் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. 

அப்படி இருக்கும் பட்சத்தில் ரிலீஸ் ஆவதற்கும் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று லைக்கா ஷங்கருக்கு ஒரு செக் வைத்திருக்கிறார். அதாவது இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், ஷங்கரிடம் எப்பொழுதுதான் இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டேன் என்று சொல்வீர்கள் என கேட்டிருக்கிறார். 

அதற்கு சங்கர், காட்சிகள் அதிகமாக இருப்பதால் என்னால் எடிட் பண்ண முடியவில்லை வேண்டுமென்றால் பார்ட் 3 எடுப்போமா என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் லைக்கா ரொம்ப டென்ஷன் ஆகி விட்டது. அதற்கு லைக்கா நிறுவனம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது. அதாவது நீங்க ஆசைப்பட்ட மாதிரி பார்ட் 3 வேண்டும் என்றால் இந்தியன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ரிலீஸ் ஆகவேண்டும். அப்படி ரிலீஸ் ஆகிவிட்டால் கண்டிப்பாக இந்தியன் 3 பண்ணலாம் என்று கூறி இருக்கிறது. இதை கேட்டதும் சங்கர் ரொம்பவே சந்தோஷத்தில் லைக்கா சொன்ன எல்லா விஷயத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டு அப்படியே பம்பரமாக இந்தியன் 2 வேலையில் முழுமூச்சுடன் இறங்கி விட்டார். 

ஆக மொத்தத்தில் சங்கர் இந்த ஒரு விஷயத்திற்காகத்தான் ரொம்ப நாளாகவே அடிபோட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதனாலேயே அந்த பாய்ண்ட் வைத்து சரியான முறையில் லாக் செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். எது எப்படியோ கூடிய விரைவில் இந்தியன் 2 படம் வெளிவரப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் சங்கர் இப்படத்தில் வேலைகளை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதினால் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படத்தை இப்போதைக்கு வேண்டாம் என்று ஓரமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4