சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

#Death #Hospital #Somalia #BombBlast #Rescue
Prasu
1 year ago
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

மத்திய சோமாலியாவில் உள்ள சந்தையில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிரான் பகுதியில் உள்ள புலோபேர்டில் மிகவும் பரபரப்பான சந்தைக்கு அருகே காரில் வைக்கப்பட்டிருந்த வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பினால் சோமாலியா தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்கள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூன்று இராணுவத்தினர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரிகள், இராணுவத் தளபதி ஒருவரின் வீடும் சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், தமது இலக்கு அருகிலுள்ள அரசாங்க முகாமையே தமது இலக்கு என நம்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!