சியாம்பலாப்பே சதுப்பு நிலத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

தெற்கு சியாம்பலாப்பே பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத நிர்வாண பெண்ணொருவரின் சடலம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலை மற்றும் கை கால்கள் இல்லாத நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் கொல்லப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அங்கொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை (27ஆம் திகதி) கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற பெண் ஒருவரைக் காணவில்லை என முல்லேரிய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, பொலிஸார் இந்த விசாரணையில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, நேற்று (29) பிற்பகல் அதே பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும் மூடிய வீடொன்றையும் மஹர பதில் நீதவான் சமன் விதானபத்திரன பார்வையிட்டார்.
இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



