தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் கைது
#SriLanka
#Arrest
#Airport
#Robbery
Prathees
1 year ago

வெளிநாடு செல்ல வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் ஸ்கேனரைச் சோதனை செய்யும் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட ஹென்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட தங்க நெக்லஸ், பென்டன்ட் மற்றும் 03 மோதிரங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



