கைதிகளுக்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களுக்குள் காணப்பட்ட மர்மம்

கைதிகளுக்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (29) பிற்பகல் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை பார்வையிட வந்த நபர், சந்தேக நபர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட லாழைப்பழ சீப்பு ஒன்றின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அங்கு சந்தேகநபர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களில் 03 மற்றும் 04 அங்குலங்கள் கொண்ட 16 குடிநீர் உறிஞ்சு குழாயில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் காணப்பட்டன.
அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வந்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.



