கலால் அதிகாரி மீது தாக்குதல்: இருவர் கைது

#SriLanka #Arrest #Robbery
Prathees
1 year ago
கலால் அதிகாரி மீது தாக்குதல்: இருவர் கைது

மத்துகம பிரதேசத்தில் கலால் திணைக்கள அதிகாரி ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கடந்த மாதம் 12ஆம் திகதி மத்துகம பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனைக்காக கலால் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சென்றிருந்தனர். 

 மூலோபாய முகவராக கடமையாற்றிய கலால் அதிகாரி மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அதிகாரியிடம் இருந்து 245,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், ஓவிட்டிகல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரும், பதுரலிய பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 அவர்களிடம் இருந்து 05 கிராம் 553 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!