ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம்

#India #sports #Tennis #Sports News
Mani
1 year ago
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

நேற்று நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், ஸ்குவாஷ், தடகளப் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. அதேநேரத்தில் சில முக்கியப் போட்டிகளில் இறுதி, காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே ஜோடி சீன தைபா அணியை எதிர்க் கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், டை பிரேக்கரில் 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.

இந்தியா பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!