முல்லைத்தீவு நீதவானின் இராஜினாமா குறித்து சுதந்திரமான விசாரணை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம்

#SriLanka #Mullaitivu #Judge
Prathees
1 year ago
முல்லைத்தீவு நீதவானின் இராஜினாமா குறித்து சுதந்திரமான விசாரணை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு நீதவானாக கடமையாற்றிய தி.சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பில் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்த பூரண விசாரணையின் தேவை எழுந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

 அங்கு முல்லைத்தீவு நீதவான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இராஜினாமா தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டுஇ இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டியது அவசியம் என்று அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

 வெளிப்படைத்தன்மையே முக்கிய எதிர்பார்ப்பு என்றும்இ விசாரணை முடிவுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலதாமதமின்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ரியான்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜெப்ரி அழகரட்ணம், சாலிய பீரிஸ், உபுல் குமாரப்பெரும ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இதில் கைச்சாத்திட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!