கணேமுல்ல சஞ்சீவவுக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியத்தை கண்டுபிடித்த பொலிஸார்
#SriLanka
#Police
#Weapons
Prathees
1 year ago

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபரை விசாரித்ததன் பின்னர் நிட்டம்புவ மைம்புல பிரதேசத்தில் பதுங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
02 கைக்குண்டுகள், மைக்ரோ ரக துப்பாக்கி, ரிவால்வர் மற்றும் T56 தோட்டாக்கள் 43இங்கு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்தக் குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார அல்லது கணேமுல்ல சஞ்சீவ தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



