பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு

வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சார்ஜன்ட் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமான உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
“வெலிகந்த பொலிஸ் நிலைய படைமுகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது கொலையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
தற்போது சரியான முடிவுக்கு வர முடியாது.மேலும், எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவித்தார்.



