“அஸ்வசும” நிகழ்ச்சித் திட்டம் நல்லது: கொடுக்கும் முறை தவறு

“அஸ்வசும” நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் குடும்ப வருமானச் செலவு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வறுமைக் கோடு கண்டறியப்பட்டு வறிய மற்றும் ஏழை அல்லாத பிரிவினரை உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், அவ்வாறான வெளிப்படைத்தன்மை எதுவுமின்றி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி வழங்கும் நிதியில் 20 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
அஸ்வசும ஒரு நல்ல வேலைத்திட்டம் என்றாலும் அந்த வேலைத்திட்டத்தில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதனை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், அந்த வேலைத்திட்டத்தை தவறான முறையில் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவுபடுத்தினார்.
கிராமிய, நகர மற்றும் தோட்டத் துறைகளில் சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் உள்ளதாகவும், அவர்களின் வருமான மட்டங்களும் வேறுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



