ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து

#Death #Accident #Train #Rescue #Scotland
Prasu
1 year ago
ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து

ஸ்காட்லாந்தில் இரண்டு இரயில்கள் மோதி கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் இரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று இரண்டு இரயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு 100 மைல்களுக்கு மேல் சென்ற முதல் நீராவி இரயில் என்ற சாதனை படைத்த, நூற்றாண்டு பழமையான பறக்கும் ஸ்காட்ஸ்மேன், விபத்தில் சம்பந்தப்பட்ட இரயில்களில் ஒன்று என்று பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்தன.

விபத்து காரணமாக 2 பேர் ராய்க்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஸ்காட்லாந்தின் ரயில் சேவை நிறுவனமான ScotRail சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், ”இரயில் விபத்து சம்பவம் காரணமாக அவிமோர் நிலையம் வழியாக எங்களால் தற்போது எந்த இரயில்களையும் இயக்க முடியவில்லை" என கூறப்பட்டுள்ளது.

 மீண்டும் சிறிது நேரத்தில், “இரயில் சேவைகள் மீண்டும் அவ்வழியாக இயங்குவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!