இன்று பிரான்ஸ் தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி இம்மானவல் மக்ரோன்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று திங்கட்கிழமை (ஒக்டோபர் 2) தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொடிருந்ததை அடுத்து, தற்போது மீண்டும் இன்று சில முக்கிய விடயங்களை தொலைக்காட்சி வழியாக அறிவிக்க உள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று Lot-et-Garonne நகருக்கு பயணிக்க உள்ளார். அவருடன் உள்துறை அமைச்சர் Gérald Darmanin உடன் செல்கிறார். இந்த விஜயமானது ‘பாதுகாப்பு’ தொடர்பான விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
புதிதாக 200 ஜொந்தாமினர்களை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தில் அது தொடர்பாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பிரான்சில் சிறுவர்கள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. அதேவேளை, சிறைக்கைதிகள் காணாமல் போவது, இணையத்தளங்களில் சைபர் தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்ற பல அச்சுறுத்தல்கல்களும் நிலவி வருகிறது. அதையடுத்து ஜனாதிபதியின் இந்த உரை அவசியமாக பார்க்கப்படுகிறது.