உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

#India Cricket #Cricket #sports #2023 #Kerala #ImportantNews #Sports News
Mani
2 years ago
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது.

அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திருவனந்தபுரத்தில் மோதவிருக்கின்றன.இந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில், இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலாவதாக திருவனந்தபுரத்தில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணியும், கவுகாத்தியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதவிருக்கின்றது.மேலும் இந்த பயிற்சி ஆட்டங்கள் நாளையுடன் நிறைவடையுள்ள நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து காண பயிற்சி ஆட்டங்கள் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4