பிரான்ஸில் கடும் புயல் வீசும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
#France
#Lanka4
#Warning
#லங்கா4
#Strom
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
நேற்று திங்கட்கிழமை மாலையில் இருந்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இன்று Philippe எனப் பெயர் இடப்பட்ட கடும் புயல் வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீர் அற்ற கால நிலையினால் இன்று பாடசாலைகள் மூடப்படுகிறது Météo-France அறிவித்தலின்படி வரும் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மிமீ மழை அங்கு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் அவசரகால நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்களில் ஒன்றான Guadeloupe தீவுக்கூட்டத்தில் வாழும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.