இந்தியாவிலுள்ள கனேடிய துாதுவர் 41 பேரை திருப்பியழைக்க வலியுறுத்து

இந்தியா, கனடாவுக்கிடையிலான மோதலின் உக்கிரம் குறைந்தாற்போலில்லை. கனேடிய தூதரக அதிகாரிகள் சுமார் 40 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா, கனடாவை வலியுறுத்தியுள்ளதாக, The Financial Times பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கனேடிய தூதரக அதிகாரிகள் 62 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 41 பேர் திருப்பி அழைத்துக்கொள்ளப்படவேண்டும் என இந்தியா, கனடாவை வலியுறுத்தியுள்ளது.
கனடா தரப்பிலிருந்து வந்துள்ள செய்தி அக்டோபர் 10ஆம் திகதிக்குள் அந்த 41 பேரையும் திருப்பி அழைத்துக்கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கனேடிய தூதரக அதிகாரிகளை அக்டோபர் 10ஆம் திகதிக்குள் திருப்பி அழைத்துக்கொள்ளுமாறும், இல்லையென்றால், அவர்களுக்கு இந்தியாவில் வரவேற்பில்லை என்றும் அறிவிப்பது, தற்போது நிலவும் சூழலுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை என்று கூறியுள்ள வெளி விவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கனேடிய செனேட் கமிட்டியின் தலைவரான Peter Boehm என்பவர், அது வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் கூறியுள்ளார்.



