பிரான்ஸின் ஒரு பாடசாலைக் கட்டிடத்தில் தீ விபத்து

#School #France #தீ_விபத்து #fire #லங்கா4 #Building #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸின் ஒரு பாடசாலைக் கட்டிடத்தில் தீ விபத்து

Yvelines மாவட்டத்தில் உள்ள HEC கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தீ பரவியது. 

அங்கிருந்த 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இரவு 8 மணி அளவில் தீ பரவியதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

 60 வரையான தீயணைப்பு படையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்தினார்கள். 400 தொடக்கம் 500 சதுரமீற்றர் பரப்பளவு உள்ள கட்டிடம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரவு 11 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தீ பரவலுக்குரிய காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!