பிலியந்தலையில் கைவிடப்பட்ட 03 மோட்டார் சைக்கில்கள் மீட்பு!

#Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பிலியந்தலையில் கைவிடப்பட்ட 03 மோட்டார் சைக்கில்கள் மீட்பு!

பிலியந்தலையில் உரிமையாளர்கள் இல்லாத மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, பிலியந்தலை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகள், சுற்றிவளைப்புக்காகச் சென்ற போது, ​​உத்தரவை மீறிச் சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று ஒருவரை கைது செய்துள்ளனர். 

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

அங்குலான பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகவும் அதன் பதிவு இலக்கத்தை கறுப்பு கம் டேப் ஒட்டி மாற்றியதாகவும், சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4