பிரான்ஸ் -பரிஸ் மூட்டைப்பூச்சி விவகாரம் பிரதமர் வரை சென்றுள்ளது
#PrimeMinister
#France
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பரிசில் தலைதூக்கியுள்ள மூட்டைப்பூச்சி விவகாரம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் விவாதிக்கப்பட்டது.
Nupes (இடது சாரி கட்சிகளின் கூட்டணி) கட்சியினர் இது தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டிருந்தனர். இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. இதனை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அரச பேச்சாளர் Olivier Véran அறிவித்தார்.
மூட்டைப்பூச்சிகளுக்கு எதிராக உடனடி பலன் தரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.