எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உணவிற்கு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

#SriLanka #weather #Food #Minister #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உணவிற்கு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியையை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

 அண்மைக்காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்களினால் இந்த நிலை உருவாக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 விவசாய அமைச்சில் உணவுப் பயிர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழையினால் அறுவடை செய்யவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கையும் அழிவடைந்துள்ளது.

 மேலும் தாழ்வான பகுதிகளில் மரக்கறி பயிர்கள் மழையினால் நாசமாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் பயிர்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பச்சைப்பயறு தேவையில் 40 சதவீதத்தை இந்த சாகுபடியின் மூலம் பெற முடியும்.

 இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளை வலியுறுத்திய அமைச்சர், தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் திட்டமும், இந்தப் பருவத்திற்கான உணவுப் பயிர்த் திட்டமும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாயச் செயலாளர்  குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.

 அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள உணவுப் பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை விவசாய திணைக்களத்தினால் உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.

 அதன்படி தயாரிக்கப்பட்ட உணவுப் பயிர் சாகுபடித் திட்டத்தை விவசாயத் திணைக்களமும், விவசாய அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்துவதுடன் மேலும் பல நிறுவனங்களையும் இதில் பங்குகொள்ளச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

 இக் கலந்துரையாடலில், தற்போதைய மழையுடனான காலநிலை மற்றும் வரட்சியான காலநிலை அடுத்த பருவத்தில் மீண்டும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளமையினால், இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 இந்த கலந்துரையாடலில் கால்நடை மற்றும் விவசாய திணைக்களம் உட்பட பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4