இசை நிகழ்ச்சியின் ஆரம்ப கட்ட வேலைகளுக்காக லண்டன் வருகைதந்த இசையமைப்பாளர் DSP

#London #England #Music #DSP #MusicConcert #WembleyArena
Mayoorikka
1 year ago
இசை நிகழ்ச்சியின் ஆரம்ப கட்ட வேலைகளுக்காக லண்டன் வருகைதந்த இசையமைப்பாளர் DSP

தென்னிந்திய திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) 2024 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி லண்டனில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார், 

இந்த இசை நிகழ்ச்சியானது தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஐரோப்பாவில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சியாகும், 

இந்த இசை நிகழ்ச்சியில் அவரால் இசையமைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களினை பாடிய பாடகர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த இசை நிகழ்ச்சியினை திறம்பட நடாத்த வேண்டும் என்பதற்காக அதன் ஆரம்ப கட்ட வேலைகளிற்காக லண்டனிற்கு வருகை தந்துள்ளார். 

images/content-image/2023/04/1696499521.png

அவரை விமான நிலையத்தில் வைத்து ஏற்பாட்டாளர்கள் வரேவேற்றுள்ளனர். 

இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் எனது அனைவராலும் அறியப்பட்டதே! தமிழில் பிரபல நடிகர்களின் வெற்றி திரைப்படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். 

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி அனைவராலும் பேசப்பட்ட படமான "புஸ்பா" திரைப்படத்திற்கு இவரே இசயமைத்திருந்தார்.

நல்ல படங்களுக்கு இசை அமைத்ததற்காக பல விருதுகளினையும் இவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!