மழையால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்: சிறுவர் வைத்திய நிபுணர்

#SriLanka #children
Prathees
2 years ago
மழையால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்: சிறுவர் வைத்திய நிபுணர்

தற்போது நிலவும் மழை நிலைமையினால் நீர் தேங்கிய பிரதேசங்களில் சிறுவர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் காணப்படுவதாக பொரளை ரிட்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர்  தீபால் பெரேரா நேற்று தெரிவித்தார்.

 குறிப்பாக குழந்தைகள் வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 மேலும் பேசிய அவர் கூறியதாவது:

 தற்போது பெய்து வரும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான உணவு கிடைக்காத நிலை உள்ளது.

 இந்த சூழ்நிலையில்இ குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

 மேலும் மழை பெய்து வருவதால் ஈக்கள் அதிகமாக உள்ளன.

 எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குழந்தைகளுக்கு சுத்தமான உணவு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ளது. எனவே, பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4