ஆந்திரப் பிரதேசத்தில் 5,000 கோடி மதிப்பிலான விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, விஜயநகரம் மாவட்டம், போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
ஜிஎம்ஆர் குழுமத்தால் உருவாக்கப்பட்ட, ஏறத்தாழ ரூ.5,000 கோடி மதிப்பிலான போகபுரம் விமான நிலையத்தை, ஆந்திரப் பிரதேச அரசு ஒரு உள்கட்டமைப்புத் திட்டமாக மட்டும் கருதாமல், ஒட்டுமொத்த வட ஆந்திரப் பிராந்தியத்திற்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சொத்தாகக் கருதுகிறது.
இது தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒரு ஊக்கியாகக் கருத்தமைக்கப்பட்டது.
முதல் கட்டத்தில் ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், அதன் திறனை ஆண்டுக்கு 4 கோடி பயணிகளாக விரிவுபடுத்துவதற்கான ஒரு பெருந்திட்டம் கொண்டுள்ளது.
விமான நிலையத்தின் வணிகச் செயல்பாடுகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர் விமான நிலையத்தின் முக்கிய அம்சங்களை பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே