அமெரிக்காவை அலறவிட்ட சோம்பி போதைப் பொருள் இலங்கைக்குள்! மனிதர்களையும் நடை பிணமாக்கும்

#SriLanka #Sri Lanka President #Crime #drugs #Drug shortage #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அமெரிக்காவை அலறவிட்ட சோம்பி போதைப் பொருள் இலங்கைக்குள்! மனிதர்களையும் நடை பிணமாக்கும்

அமெரிக்காவின் பிடெல்ரா மாநிலத்தினை அலறவிட்டுக் கொண்டிருக்கும் சோம்பி எனப்படும் புதியவகை போதை பொருள் இலங்கைக்குள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது ஹேரோயினை விடவும் 50 சதவீதம் ஆபத்து மிகுந்தது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 இதுதொடர்பில் போதை பழக்கத்தில் விடுப்பட சிகிச்சையளிக்கும் மருத்துவர் விராஜ் பெரேரா தெரிவிக்கையில்,

 சோம்பி ட்ரக்ஸ் என்பது விலங்குகளை மயக்கமடைய செய்ய பயன்படுத்தும் மருந்து. இந்த போதைப் பொருளை பயன்படுத்தும் நபரின் மூளை செயற்திறனை இழக்கும். 

இறந்த உடலுக்கு உயிர் வந்தது போல இருக்கும். அமெரிக்காவில் சில மாநிலங்களில் உள்ள நகரங்களில் சோம்பி நிலையில் பலர் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சோம்பி நிலையில் இருப்பவர் தனக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய மாட்டார்.

 சோம்பி நிலைக்கு மாறும் நபர்கள் சில நேரம் வன்முறையாக நடந்துக்கொள்வர்கள். 

அவர்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள். இந்த சோம்பி ட்ரக்ஸ் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

 இலங்கையில் எந்த அளவுக்கு இந்த போதைப் பொருள் பரவியுள்ளது என்பது தெரியாது. நாட்டை ஆட்சி செய்பவர்கள், சட்டத்தை பாதுகாப்பவர்கள் போதைப் பொருள் மூலம் நன்மைகளை பெற்று வருவதால், போதைப் பொருளை ஒழிக்கும் தீர்வுகளை முன்வைக்க அக்கறை காட்டுவதில்லை எனவும் மருத்துவர் விராஜ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை பாடசாலை மாணவர்களை குறிவைத்து பேனா வடிவிலும் தற்பொழுது போதைப் பொருள் உலாவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4