செம்மணி புதைகுழி, அகதிகள் விவகாரம்: முதலமைச்சர் விஜய்யிடம் முக்கிய கோரிக்கைகள்.

#SriLanka #Lanka4 #Vijay #ChiefMinister #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
செம்மணி புதைகுழி, அகதிகள் விவகாரம்: முதலமைச்சர் விஜய்யிடம் முக்கிய கோரிக்கைகள்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஈழத் தமிழர் விவகாரங்களை கையாள்வதற்காக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடனான நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழுவொன்றை அமைக்குமாறு கோரியதாகக் கூறினார்.

இந்தக் கோரிக்கைக்கு இணங்க, ஈழத் தமிழர் விவகாரங்களை முன்னெடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழி, தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பான சர்வதேச விசாரணை, ஈழத் தமிழர்–தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு சமூக மட்டத் தீர்வு, மற்றும் ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு உள்ளிட்ட விடயங்களும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4