தொடர்ந்து மூடப்படுகின்றது அனைத்து பாடசாலைகளும்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல்

#SriLanka #School #weather #Rain #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
தொடர்ந்து மூடப்படுகின்றது அனைத்து பாடசாலைகளும்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல்

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் ஆகியோர் தலைமையில் இன்று (07) இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்படுமென மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் கடந்த 5 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 இதேவேளை குறித்த மாவட்டத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4