இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது - ரணில்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது - ரணில்!

இன மற்றும் மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன, மத பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.  

அதற்கான விரைவான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக சாதி, மத வேறுபாடின்றி நாட்டு மக்கள் அனைவரும் மிக மோசமான அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,  சிங்களமோ தமிழோ.. அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்வதே இன்றைய தேவை என்றும் வலியுறுத்தினார்.

பிரிவினையினாலும், ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டும், இலங்கை ஒரு நாடாக வீழ்ந்துள்ளது எனவும், அரசியல் பிளவு இலங்கையை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

 நாட்டின் பிரச்சினைகளுக்கு நாட்டிற்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதனை சர்வதேச ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதை தாம் நம்பவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4