இலங்கையின் வட,கிழக்கு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் வட,கிழக்கு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் வட,கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் மேல் அதிகபட்சமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4