வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Police #Warning
PriyaRam
2 years ago
வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய  அறிவிப்பு!

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு - சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேநேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 குறித்த விபத்துகளில் ஆயிரத்து 733 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4