எமது பிள்ளையான் ஒரு வார்த்தைகூட கூறியதில்லை! சாணக்கியன் இனவாதம் பேசுகின்றார்! சுமண தேரர்

#SriLanka #Batticaloa #Protest #sanakkiyan
Mayoorikka
2 years ago
எமது பிள்ளையான் ஒரு வார்த்தைகூட கூறியதில்லை! சாணக்கியன் இனவாதம் பேசுகின்றார்! சுமண தேரர்

சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் பாராளுமன்றுக்கு சென்று சிங்களவர்களை விரட்டியடிக்க கறவை மாடுகளின் உரிமை பற்றி பேசுகின்றார் என அம்பிட்டிய சுமண ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.

 நேற்று மட்டக்களப்பு நகரப் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

 எமது பிள்ளையான் அமைச்சர் எமக்கு ஒரு வார்த்தைகூட கூறியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் பாராளுமன்றம் சென்று சிங்களவர்களை தாக்குகின்றார். மற்றுமொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார் வியாழேந்திரன் அவரும் ஒருபோதும் சிங்களவர்களை தாக்கியதில்லை.’ என்று கூறியுள்ளார். 

 சாணக்கியன் எம். பி. சிங்களவர்களை தாக்குவதை அவர் நிறுத்தாவிட்டால், எங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை. நாம் எந்தவொரு தமிழருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் எதிராகவும், இனவாத மதவாதத்தை பரப்பியது இல்லை. அதன் பிரதிபலனாகவே நாம் இந்தமட்டக்களப்பு நகரில் வாழ்கின்றோம்.

 நாம் 35 ஆண்டுகள் வாழ்கின்றோம். எல்லோருக்கும் என்னைப்பற்றி தெரியும். எந்தவிதமான இனவாத மதவாதத்தையும் நான் முன்னெடுத்ததில்லை. தாய், பிள்ளை போன்று வாழ்கின்றோம். 

சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் பாராளுமன்றுக்கு சென்று சிங்களவர்களை விரட்டியடிக்க கறவை மாடுகளின் உரிமை பற்றி பேசுகின்றார்.

 சிங்களவர் சோறு சாப்பிடுவதை பற்றி பேசவில்லை. சாணக்கியன் பாராளுமன்றிற்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார். இதனை நிறுத்த வேண்டும். 

இது நிறுத்தப்படும் வரை நாமும் ஓர் இனம் என்ற ரீதியில் செயல்படவேண்டும்  என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4