வழமைக்கு திரும்பியுள்ள வடக்கு மாகாண நீதிமன்றங்கள்!

#SriLanka #Sri Lanka President #Mullaitivu #Judge #Juctice #Court
Mayoorikka
2 years ago
வழமைக்கு திரும்பியுள்ள வடக்கு மாகாண நீதிமன்றங்கள்!

வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் சட்டத்தரணிகள் வழக்கம் போல பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

 முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் நீதி கோரி நேற்று கொழும்பில் சட்டத்தர ணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 வட மாகாணம், கிழக்கு மாகாணத்திலுள்ள சட்டத்தரணிகளுடன் கொழும்பிலுள்ள சட்டத்தரணி களும் நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, இதுவரை நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வடக்கு சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இன்று முதல் வழக்கம் போல இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4