இலங்கை - அவுஸ்திரேலியா முதலீட்டு ஒப்பந்தம்! அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கை

#SriLanka #Sri Lanka President #Australia #Development #economy
Mayoorikka
2 years ago
இலங்கை - அவுஸ்திரேலியா முதலீட்டு ஒப்பந்தம்! அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 அவுஸ்திரேலியா இலங்கையில் ஒரு முக்கியமான வெளிநாட்டு நேரடி முதலீட்டு பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஐந்தாவது பெரிய ஆதாரமாகவும் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்படி வர்த்தக உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பைத் தொடரும் வகையில் குறித்த ஒப்பந்தத்தை எதிர்வரும் 10-10-2023 முதல் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4