தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டி - யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி அணி வெற்றி(புகைப்படம் இணைப்பு)
#SriLanka
#Jaffna
#School
#Student
#Women
#football
#sports
#sri lanka tamil news
#Girl
#kurunagala
Prasu
1 year ago

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயது அணி சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி இன்று 09.10.2023 திங்கள் காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மகாஜனா முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவதுபாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டது. மகாஜனா தொடர்ந்து இரண்டாவது வருடமாக சாம்பியனாகியுள்ளது.
கடந்த வருடமே(2022) 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பித்த ஆண்டே மகாஜனா முதல் அணியாக சாம்பியனாகி வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவ்வருடம் சாம்பியனாகியுள்ளது.



