நாட்டின் பொருளாதாரத்தை சுபீட்சப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்த திட்டம்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #technology
Mayoorikka
2 years ago
நாட்டின்  பொருளாதாரத்தை சுபீட்சப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்த திட்டம்!

இலங்கையின் புவியியல் அமைவிடமும் மனித வளமும் மட்டுமே பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கான ஒரே வழி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 நாட்டை கட்டியெழுப்புவதற்கு மனித வளத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகள் மனித சக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் அபிவிருத்தியை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) கண்டி கிளையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

 ஏழு மாடிகளைக் கொண்ட இந்த தனியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வக வசதிகள், மாநாட்டு அரங்குகள், ஆராய்ச்சி கூடங்கள் மற்றும் குடியிருப்பு வசதிகள் உள்ளன.

 அதிவேகமாக வளர்ந்து வரும் அதிக போட்டித்தன்மை கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவை இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டங்களாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4