ஒக்டோபர் 14 ஆம் திகதி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரவுள்ள சந்திரன்

#sun #Moon #Earth #solar_eclipse #Astronomy #Spirituality
Prasu
11 months ago
ஒக்டோபர் 14 ஆம் திகதி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரவுள்ள சந்திரன்

வானியல் ஆராய்ச்சி ஆயிரம் மடங்கு வளர்ந்தாலும் ஆன்மீக முறைப்படி சூரிய கிரகணத்தை அவதானிப்போர் பலர் இவ்வுலகில் வாழ்கின்றனர்.

 அவ்வகையில்ஒக்டோபர் 14 ஆம் திகதி சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரவுள்ளது. 

images/content-image/1696972577.jpg

அப்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் அளவில் பெரியதாக இருக்கும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

images/content-image/1696972594.jpg

சனிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்படவுள்ளது. அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். ஆனால் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

images/content-image/1696972611.jpg