இலங்கைக்கு புகழாரம் சூட்டிய சர்வதேச நாணய நிதியம்!

#SriLanka #China #IMF #money
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு புகழாரம் சூட்டிய சர்வதேச நாணய நிதியம்!

கடினமானதும் தேவையானதுமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 மொரோக்கோவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு துறை சிரேஷ்ட அதிகாரி டேனியல் லீ செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 எனினும், இலங்கை அதன் முழுமையான பொருளாதார மீட்சியை இன்னும் உறுதி செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

 இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான உலகளாவிய வளர்ச்சி மதிப்பீட்டை, சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புதிய மதிப்பீடுகளுக்கு அமைய 2024ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 இந்த கணிப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 3 சதவீதமாக இருந்தது. எவ்வாறாயினும் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி மதிப்பீடு அதேநிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன அதேநேரம் பொருளாதார வளர்ச்சியும் 2023 ஆம் ஆண்டு 1.5 சதவீதத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு 1.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, 3 மாதங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டதை விடவும் இந்த ஆண்டும் எதிர்வரும் ஆண்டும், பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

 இதன்படி, 2023 ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக உள்ள உலக பணவீக்கம் 6.9 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 2023 ஆம் ஆண்டுக்கும் 2028 ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஒவ்வொரு நாடுகளுக்குமான பொருளாதார கணிப்புகள் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

 எனினும், கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இடம்பெற்று வருகின்றமையால் இலங்கை குறித்த மதிப்பீடுகள் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4