31 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்காக 3 பேருக்கு மரண தண்டனை

#SriLanka #Court Order
Prathees
2 years ago
31 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்காக 3 பேருக்கு மரண தண்டனை

31 வருடங்களுக்கு முன்னர் கம்புகளால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று (10) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 மேலும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

 1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி கீரந்திடிய, நாவுட்டுடுவ பிரதேசத்தில், கண்ணுவே 5, மீகம்வத்தை கொலனியில் வசித்து வந்த தனபால பெர்னாண்டோ நேமத்த என்பவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 இவ்வழக்கின் 3, 4 மற்றும் 5ஆம் பிரதிவாதிகளான பல்லேகொடவைச் சேர்ந்த ஒலிவர் என அழைக்கப்படும் மல்முத்துகே தயாரத்ன, நாவுட்டுடுவ, கீரந்திடிய பகுதியைச் சேர்ந்த அனகிபுர ஆரியரத்ன என்ற லொக்கா, தர்மதிலக பெர்னாண்டோ அல்லது கிமத்திய பெர்னாண்டோ, கிமத்திய கன்வான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 முதலாம் பிரதிவாதியான பேருவளை, கலவில பிரதேசத்தைச் சேர்ந்த அனகிபுர பிரேமதிலக என்ற ரத்னா என்பவருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் மேற்படி நட்டஈடு வழங்கப்படாவிட்டால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 இந்த வழக்கின் 2வது பிரதிவாதி புற்றுநோயால் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நவுத்துடுவ கீரந்திடிய பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து, கம்பு தடியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டளனர். 

சுமார் 32 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4