நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு போராட்டம்!

#SriLanka #Protest #doctor
PriyaRam
2 years ago
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு போராட்டம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பள கொடுப்பனவுகள், மருத்துவமனைகளில் பொருத்தமற்ற பணிச்சூழல் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக 1,500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சுகாதார ஊழியர்களை அச்சுறுத்தி மருத்துவப் பட்டங்களை வழங்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள சுகாதாரத் துறை ஊழியர்களை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் பாதுகாக்க வேண்டும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

 தற்போது இலங்கையின் சுகாதாரத் துறையை கடுமையாகப் பாதித்து வரும் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என GMOA தெரிவித்துள்ளது. எனவே, இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களை பாதுகாக்குமாறு கோரி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதற்கு GMOA தீர்மானித்துள்ளது. 

 அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது

 இதேவேளை, தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமை தொடர்பில் தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4